வலிமையான தேசத்தை உருவாக்கிய வல்லபாய் படேலின் ஈடுஇணையற்ற பங்களிப்பை, இந்தியா என்றென்றும் மறக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல், நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரை நினைவு கூரும் வகையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75ம் ஆண்டு நினைவு தினத்தில், அவருக்கு மரியாதை மிகுந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்கப்படாத, வலிமைமிக்க பாரதத்தை உருவாக்கியதில், வல்லபாய் படேலின் ஈடுஇணையற்ற பங்களிப்பை, இந்தியா என்றென்றும் மறக்காது என்றும், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

























