டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில், கடுமையான பனிமூட்டம் காணப்படுவதால், சென்னையில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு, மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக, கடந்த சில நாட்களாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தரை இறங்க வேண்டிய விமானங்கள், வேறு விமான நிலையங்களில் சென்று தரை இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இருந்து இன்று டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா, காசியாபாத் நகரங்களுக்கு செல்லும் விமானங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், டெல்லி, ஜெய்ப்பூர், பாட்னா, புனே, கொல்கத்தா மற்றும் இந்தூர் ஆகிய நகரங்களில் இருந்து, சென்னை வரவேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற விமானங்களின் வருகை மற்றும் புறப்பாட்டிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
























