இலங்கை அரசு ஏற்படுத்த உள்ள புதிய அரசமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறையை இணைக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் அந்நாட்டின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் நேரில் வலியுறுத்தினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் ஏற்பாட்டின் பேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய கட்சித் தலைவர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா உள்ளிட்ட அந்நாட்டு பிரதிநிகள் சந்தித்து இந்த கருத்தினை வலியுறுத்தினர். மேலும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் கேட்டுக்கொண்டனர்.

























