தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே, தனியார் நிறுவனங்கள் பாய்மர படகு பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசு மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன், நாகை துறைமுகத்தில் அரசு பாய்மர படகு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்துவைத்த உதயநிதி ஸ்டாலின், புதிதாக இணைந்த 5 மாணவர்களுக்கான முதல்கட்ட பயிற்சியையும் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து இ.எம்.ஹனிபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாகூர் சில்லடியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பூங்காவையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

























