அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்த தகவல் எதுவும் அதிகாரப்பூர்மானது இல்லை என்றும், எம்.ஜி.ஆரின் ஆசி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ளதாகவும் பிஜேபி மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாயில் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் பிஜேபி-க்கு 23 இடங்கள் என்பதெல்லாம் வெறும் காற்றில் பரவும் தகவல் மட்டுமே என்றும், அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறினார்.
திமுக-வை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கம் அதிமுக என்றும், அதே நோக்கத்தில்தான் பிஜேபி-யும், அதிமுக-வும் இப்போது கூட்டணி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

























