மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், தனது ஆதரவாளர்களுடன் வந்து சசிகலா மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடன் வாங்கியதில் மட்டும் தான் திமுக அரசு சாதனை செய்திருப்பதாக விமர்சித்தார்.
அதிமுகவில் சிலர் செய்த தவறுகளினால் தான் திமுக ஆட்சியை பிடித்தது. அந்ந நிலையை மாற்றுவதற்கு முயற்சி எடுத்து வருவதாகவும் சசிகலா கூறினார். நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள், என்ற சசிகலா எடப்பாடி நல்ல தலைவரா என்பதை வரும் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் பதிலளித்தார்.

























