காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் இன்று பிற்பகல் இரண்டரை மணிக்கு டெல்லியில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி நீர்வளத்துறை பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அணையில் இருந்து திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு தவறாமல் விடுவிக்கிறதா என்பது குறித்து ஆராயவும், வரும் மாதங்களில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து காணொளி மூலம் கலந்து கொள்கிறார்கள்.

























