சென்னை டிஜிபி அலுவலகம் அருகே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட முனியசாமி புரத்தை சேர்ந்த அகஸ்டினால் என்பவர், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் திமுகவை சேர்ந்த தயாளன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் அபகரித்து விட்டதாக கூறி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
அப்போது அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தது விசாரணையில் தெரிய வந்தது.























