பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரி மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணி, நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக முன்னணி நிலவரம் காலை 11 மணியளவில் தெரியவரும் என்றும், முடிவுகள் நாளை பிற்பகலில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

























