ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ஆயிரத்து 520 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு சவரன் 92 ஆயிரத்து 400 ரூபாயாக இருக்கிறது.
அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. எனினும், இன்றைய தினம் சவரனுக்கு ஆயிரத்து 520 ரூபாய் குறைந்திருக்கிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 550 ரூபாயாகவும், ஒரு சவரன் 92 ஆயிரத்து 400 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்திருக்கிறது. வெள்ளி ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

























