கேரளாவில் கண்டறியப்பட்டுள்ள மூளையை திண்னும் அமீபா நோயால், ஐயப்ப பக்தர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சமுதாய நல செவிலியர்கள், அலுவலக கண்காணிப்பாளர்களுக்கான பதவி உயர்வு, ஆய்வக நுட்பனர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு 220 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் மருத்துவத் துறையில் 35 ஆயிரத்து 702 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். கேரளாவில் அதிகரித்து வரும் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்று தொடர்பாக தமிழ்நாட்டில் ஏற்கனவ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் இருப்பது தொடர்பான சட்டப்போரத்தை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

























