சுனாமியில் சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையத்தை, மீண்டும் இயக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது.
ஜப்பானின் நிகாட்டா மாகாணம் புகுஷிமா நகரில், உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு 9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் உலைகள் சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சு அபாயத்தால் சுமார் ஒன்றரை லட்சம் பேர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து புகுஷிமா அணுமின் நிலையத்தை உடனடியாக மூட அரசாங்கம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், அணுமின் நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்த வாக்கெடுப்பு, நிகாட்டா மாகாணத்தில் நடைபெற்றது. அப்போது, அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஆதரவாக, 50 சதவீதம் பேர் வாக்களித்தனர். எனவே அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


























