சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் ஒற்றையர் ஆடவர் போட்டியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மஞ்சுநாத் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆடவருக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் பிரியான்ஷு ரஜாவத் மோதினர். இதில் 21-14, 21-4 என்ற செட்கள் கணக்கில் கிடாம்பி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மஞ்சுநாத்- மன்ராஜ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் மஞ்சுநாத் 21-18, 21-13 என்ற கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.


























