டிட்வா புயலால் பெய்த கனமழையால் டெல்டா மாவட்டங்களில், சுமார் 2 லட்சம் ஏக்கரில், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வடக்குப்பட்டு, கக்கரைப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250 ஏக்கரிலான நெற்பயிர்கள் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தேங்கிய தண்ணீர் வெளியே வடியாததால் முழுவதுமாக பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டுள்ள நெற்பயிர் நீரில் மூழ்கியதால், இழப்பை சரிசெய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

























