மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா? அல்லது அரசியலா? என்பதை,
மக்கள் முடிவு செய்வார்கள் என்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறது.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மெட்ரோ இரயில், எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றைத்தான், மதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

























