தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய முழு உரிமை மாணவர்களுக்கு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் திருஞானம் எழுதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவாலயத்தில் வெளியிடப்பட்ட ‘ஒரு டிரில்லியன் டாலர் கனவு’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஷ், திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அன்பில் மகேஷ், மாணவர்கள் அறிவு சார்ந்த சமுதாயமாக தங்களை மாற்றிக்கொண்டு, அதன் பின் யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற முடிவை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சிலர் தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றுவோம். கலவரத்தை ஏற்படுத்துவோம் என ரூம் போட்டு யோசித்து கொண்டிருக்கின்றனர் என்றும் அன்பில் மகேஷ் விமர்சித்தார்.

























