விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, “பாரதி பறை பண்பாட்டு” மையத்தை, தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் வேலு ஆசான். பறை இசையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியவர்களில் இவர் முக்கியமானவர். இவரை போற்றும் வகையில், அண்மையில் மத்திய அரசு வேலு ஆசானுக்கு, பத்மஸ்ரீவிருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில், வேலு ஆசான் முயற்சியில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த மேட்டமலையில், பாரதி பறை பண்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தை தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அப்போது, அவருக்கி நாட்டுப்புற கலைஞர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து ஆளுனர் ஆர்.என்.ரவியும் பறையிசைத்து மகிழ்ந்தார்.
























