மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்கிற பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா என்று பெயர் மாற்றம் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பல நேரங்களில் காந்தியடிகளை புகழ்ந்து பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாலும், மகாத்மாவின் புகழை சிதைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலினால், இத்தகைய நடவடிக்கைகளை பிஜேபி அரசு மேற்கொண்டு வருவதாகவும் செல்வபெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
மகாத்மா காந்தி, பண்டித நேரு ஆகியோரின் புகழை வரலாற்றில் இருந்து அழிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு பிஜேபி செயல்பட்டால், நாட்டு மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

























