திமுக மிகவும் கட்டுக்கோப்பான இயக்கம் என்பதற்கு திருவண்ணாமலையில் கூடிய இளைஞர் அணி நிர்வாகிகளே சாட்சி என்றும், கட்டுபாடு இல்லாத ஒரு கோடி இளைஞர்களை திரட்டினாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்குமண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, திமுக-வை யாராலும் மிரட்டிப்பார்க்க முடியாது, எந்த அடக்குமுறையானாலும் இளைஞர் அணியும், கருப்பு-சிவப்புப்படையும் எதிர்த்து நிற்கும் என்று கூறினார்.

























