அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அதிகாலை 3 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. பின்னர் விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சுப்ரமணிய சுவாமியை தரிசித்து சென்றனர்.
முன்னதாக, கோவிலில் உண்டியல்கள் எண்ணும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதில், 3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 ரூபாய் காணிக்கையாக கிடக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மார்கழி மாத பிறப்பை ஒட்டி சரவண பொய்கையில் புனித நீராடிய முருக பக்தர்கள், தங்களது விரதத்தை துவக்கினர்.
























