பிரேசில் நாட்டில் பலத்த காற்று காரணமாக, சுதந்திர தேவி சிலை விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் நாடுகள் பலவற்றிலும் சூறாவளி மழையும் மக்களை கடும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளன, அந்த வகையில், பிரேசில் நாட்டின், குவைபா மாநிலத்தின் ரியூ கிராண்டே டூ சுல் நகர், புயல் காரணமாக கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த நகரில் இருந்த மிகப்பெரிய சுதந்திர தேவி சிலை, பலத்த காற்றால் விழுந்து நொறுங்கியது. அப்போது அருகில் யாரும் இல்லாததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை அங்கிருந்தவர்கள் சிலர், தங்களது செல்போனில் படம்பிடித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


























