ராமநாதபுரம் அருகே விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கும்பரம் ஊராட்சியில், 510 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் விமான நிலையம் அமைக்க, விளை நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், சட்டமன்றத் தேர்தலை முழுவதுமாக புறக்கணிக்கப் போவதாக எச்சரித்துள்ளனர்.

























