திருவள்ளுர் மாவட்டம் அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டாபுரம் கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 7-ஆம் வகுப்பு படித்த ரோகித் என்ற மாணவன், நேற்று மதியம் பள்ளிக்கூட வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது, பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சிறுவனது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இந்த தொகையை ஏற்க மறுத்துள்ள உறவினர்கள், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், மாணவனின் தந்தைக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களது கோரிக்கையை அரசு ஏற்றால் மட்டுமே, சிறுவனின் சடலத்தை பெற்றுக் கொள்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவனின் உறவினர்களிடம், சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

























