கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதால், பாமக-விலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கக்கோரி, ஜி.கே.மணிக்கு அன்புமணி தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
பாமக தலைவர் அன்புமணி மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டில்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தது உள்ளிட்டவை அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

























