“கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு” என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என, சட்டத்தை திருத்தியும் – நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து, கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் பிஜேபி அடிக்க துடிக்கிறது.
பிஜேபி அரசின் நாசகார சதிச் செயலையும் – அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.கவையும் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும், இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைநகர் சென்னையிலும் – மாநிலத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், 100 நாள் வேலைவாய்ப்பினால் பயன்பெறுவோரைத் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

























