அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர், ஜனவரி 6-ஆம் தேதி முதல், காலவரறையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ள சூழலில், டிசம்பர் 22-ந்தேதி அமைச்சர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையிலும் பங்கேற்போம் எனத் தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதியம், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தினர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடுத்தகட்டமாக ஜனவரி 6-ஆம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22ம் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

























