வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்தவரை, ஒரு கும்பல் அடித்துக் கொன்றதுடன், சாலையில் வைத்து அவரது உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய, எதிர்க்கட்சி தலைவர் ஷரிஃப் ஒஸ்மான் ஹாதி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் குதித்ததால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி அமைந்த பிறகு, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இஸ்லாம் மதம் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, கும்பல் ஒன்று சாகும் வரை மரத்தில் கட்டிவைத்து அடித்து கொன்றுள்ளது. பின்னர், தேசிய நெடுஞ்சாலையில் உடலை தீயிட்டு எரித்தது. மைமென் சிங் மாவட்டத்தில் உள்ள பலுகா உபாஜிலா என்ற இடத்தில் நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


























