ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட நில அதிர்வால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்திய நேரப்படி காலை 11.09 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 புள்ளி 3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மதியம் 12 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 4 புள்ளி 6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.


























