அசாம் தலைநகர் குவஹாத்தியில், 4 ஆயிரம் கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்டுள்ள, லோக்பிரிய கோபிநாத் பர்டோலி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசு மிகப்பெரிய துரோகங்களை இழைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
நாட்டின் வளர்ச்சி குறித்த எந்த அக்கறையும் காங்கிரஸ் கொள்கையில் இல்லாததால், அவர்களால் எந்தவொரு மாபெரும் வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் தாஹேர்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியின் ஹெலிக்காப்டர் மோசமான வானிலை தரையிறக்க முடியாமல் கொல்கத்தா திரும்பியது. அங்கிருந்து காணொலியில் உரையாற்றிய அவர், மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதாக, மம்தா பானர்ஜி அரசை விமர்சித்தார்.

























