கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். புதுச்சேரி மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் புதுச்சேரி வந்து, புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். மேலும் தற்போதே, ஏராளமானோர் புதுச்சேரிக்கு வரத் தொடங்கியுள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பயன்படுத்தி, சமூகவிரோதிகள் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி கிழக்குப் பகுதி கண்காணிப்பாளர் ஸ்ருதி எராகட்டி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி நகரில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

























