மதுரையில் நடைபெற்ற, எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் எழுதிய “கருப்பு ரட்சகன்” நாவல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தேர்தல் களத்தில் நான் எடுக்கிற முடிவுகள் வெளியில் உள்ளவர்கள் பார்வையில் சில நேரத்தில் பிழையாக இருக்கலாம் என்றார்,
முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்த போது திமுக கூட்டணியில் தொடர்ந்ததை சிலர் இன்றும் விமர்சிப்பதாகவும், வேங்கைவயல் உள்ளிட்ட பல தலித் மக்கள் பிரச்சனைகளின் போது, அரசுக்கு எதிராக தானோ பல போராட்டங்களை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
கூடுதல் தொகுதிகள் பெற்றாலும் முதலமைச்சராகிவிட முடியாது. பதவி பெரியதல்ல என்பதால் கூடுதல் தொகுதி தரும் வேறு கூட்டணியில் இணையவில்லை என்றும், பதவி ஆசை இல்லாததே திமுக கூட்டணியில் தொடர்வதற்கான காரணம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

























