அணுசக்தி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும், ‘சாந்தி’ மசோதா இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி, அணுசக்தி விபத்து ஏற்பட்டால் அணு உலை இயக்குபவரின் இழப்பீட்டுப் பொறுப்பு அதிகபட்சம் 3 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் அணு உலைகளை வழங்கும்போது விபத்து ஏற்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு நிறுவனங்கள் இந்தியாவில் அணுசக்தி திட்டங்களைத் தொடங்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலமாக, தனது நண்பர் டிரம்பை திருப்திப்படுத்தவே,, அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும், சாந்தி மசோதாவை பிரதமர் மோடி அவசரமாக நிறைவேற்றியிருப்பதாக, காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.























