சமூக, சமத்துவ நல்லிணக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் 100 சதவீதம் கடைபிடிக்கும் என்றும், தமிழ்நாட்டில் புதிய ஒளி பிறக்கும், அதன் வழிகாட்டுதலோடும், கடவுளின் ஆசியோடும் எதிரிகளை வீழ்த்த முடியும் என்று விஜய் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க தலைவர் விஜய், ஏசு கிறிஸ்துவின் வரலாற்றையும், பைபிள் கதைகளையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
த.வெ.க-வைப் பொறுத்தவரை, 100 சதவீதம் சமூக, சமுதாய நல்லியணக்கத்தை பின்பற்றும். விரைவில் புதிய ஒளி பிறக்கும், அந்த ஒளியின் வழிகாட்டுதலுடனும், கடவுளின் ஆசியோடும் எதிரிகளை நாம் வீழ்த்த முடியும் என்றும் விஜய் கூறினார்.

























