தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன.
திமுக-வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு, கனிமொழி தலைமையில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன். கோவி செழியன், டி.ஆர்.பி. ராஜா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.எம் அப்துல்லா உள்ளிட்ட 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிக்கையில், மக்களுக்கான புதிய அறிவிப்புகள், ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களை தொடர்வது உள்ளிட்டவை குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
























