நடிகர் விஜய் தனியாக தேர்தலில் போட்டியிட்டால் திமுகவை தோற்கடிக்க முடியுமா என்பதை அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என பிஜேபி மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிஜேபி தலைமை அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பியூஷ் கோயலின் வியூகத்தின் மூலம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என தெரிவித்தார். எத்தனை தொகுதிகளில் பிஜேபி போட்டி என்பதை தங்களது தேசிய தலைமையும், அதிமுக தலைமையும் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

























