விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்று வங்கதேச அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். வங்கதேசத்தின் மைமன்சிங் என்ற இடத்தில் அண்மையில் திபு சந்திரதாஸ் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு இடைக்கால அரசு நீதி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
டெல்லியில் இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் பதற்றம் நீடித்தது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
இதேபோல், வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள, மேற்குவங்க மாநிலத்தின் சிலிகுரியில் உள்ள வங்கதேச துணைத் தூதரகத்தின் முன்னரும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு, வங்கதேசத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


























