திருப்பரங்குன்றம் மலைமீது தீபத்தூணில் விளக்கேற்ற வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மலை தீபம் ஏற்றிய மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூரில் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாத அதிகாரிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குவிசாரணை நடைபெற்று வரும் நிலையில், மக்களையும், கோவிலுக்குள் கடந்த 20 நாட்களாக அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், மலையின் மீதுள்ள, சிக்கந்தர் மலையில், சந்தனக்கூடு விழாவிற்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில், மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பரங்குன்றம், பழனியாண்டவர் கோவில் தெரு, கீழத்தெரு, கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில், வீடுகள் முன்பு முருகன் படம் பொறித்த கொடியை ஏற்றி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

























