தந்தை பெரியாரின் 52-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாவின் உருவச்சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த, உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாவின் நினைவு நாளை ஒட்டி, சென்னையில் உள்ள அவருடைய சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களும் பெரியாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
இதேபோல், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
























