மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளை ஒட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதிமுக-வை எந்நாளும் காப்போம் என எடப்பாடி தலைமையில் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு நாள் இன்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர், எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட் அதிமுக-வை எந்நாளும் பாதுகாப்போம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொண்டர்களை யாராலும் வீழ்த்திவிட முடியாது என்றும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வென்று காட்டுவோம் என்றும் இபிஎஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

























