ரஷ்ய ஹேக்கர்கள் குழுவின் சைபர் தாக்குதல் காரணமாக, பிரான்சில் அஞ்சல் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஐரோப்பிய நாடான பிரான்சில், கிறிஸ்துமஸ் பண்டிகை பரபரப்புக்கு நடுவே, சைபர் தாக்குதல் காரணமாக தேசிய அஞ்சல் சேவையான லா போஸ்ட் மற்றும் அதன் வங்கி பிரிவான லா பேங்க் போஸ்டல் ஆகியவற்றின், ஆன்லைன் சேவைகள் முடக்கப்பட்டன.
இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பார்சல்கள் அனுப்புவதிலும், அதனை பெறுவதிலும் தாமதமும், தடைகளும் ஏற்பட்டன. இந்த சைபர் தாக்குதலால், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், இதனை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த சைபர் தாக்குதலுக்கு ரஷ்ய ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


























