ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் பதிவு செய்து முடித்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இதனை தெரிவித்த சங்கத்தின் நிர்வாகி மௌலானா சம்சுதீன் காசிமி, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஹாஜிகள் ஹஜ் புனித பயணத்தை நிறைவேற்ற சவுதி அரேபியா சென்று வருவதாக குறிப்பிட்டார்.
முறைகேடுகளையும் போலிகளையும் தவிர்ப்பதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் நிறுவனங்களிடம் மட்டுமே புனித பயணம் மேற்கொள்பவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

























