அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் வட கரோலினாவின் சார்லட் புறநகர்ப் பகுதியில் மர்மநபர் ஒருவன் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயம் அடைந்தனர். அந்த நபர் துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கியதும், பதிலுக்கு காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது அந்த நபர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். காயம் அடைந்த காவல்துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























