கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கினால் போதுமா? பெயர் வைத்தால் குழந்தை தானாக வளர்ந்துவிடுமா? அந்தக் குழந்தைக்குச் சத்தான உணவைத் தர வேண்டாமா? மாவட்டத்தை உருவாக்கினால், அதனை நிர்வகிக்கக் கட்டடம் வேண்டாமா என அடுக்கடுக்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
2015-ல் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது, தனியாரும் தன்னார்வலர்களும் அளித்த நிவாரணப் பொருட்களில் எல்லாம் தேடித் தேடி ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் அதிமுகவினர் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதி என்பது 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவது. அதனை ஏன் நான்கரை ஆண்டுகள் கழித்துக் கொடுக்கிறீர்கள்? எனக் கூச்சமே இல்லாமல் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்புவதாகவும் ரகுபதி சாடியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டுவந்த லேப்டாப் திட்டத்தை திமுக முடக்க நினைக்கவில்லை. அதனால்தான் அந்தத் திட்டத்தைத் தொடர்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019-ஆம் ஆண்டு வரை மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

























