இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மீண்டும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான நல்லகண்ணு, 2 நாட்களுக்கு முன்னர் 100 வயதை நிறைவு செய்து, 101-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இந்த சூழலில், அவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
























