கோவையில் உள்ள ஆத்துபாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் வைக்க முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் சி.சுப்பிரமணியம் என்றும், அவருடைய புகழைப் பரப்ப வேண்டும் என்ற பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் விடுத்த கோரிக்கையை ஏற்று, கோவை உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் மேம்பாலம் என்று பெயர்சூட்டும் அறிவிப்பை பகர்ந்து கொள்வதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

























