திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, வாக்கு வங்கி அரசியலுக்கான கட்சி அல்ல என்றும், திமுக-வுடனான கூட்டணி என்பது தொகுதிப்பங்கீட்டிற்கானது மட்டுமல்ல என்றும் தெரிவித்தார்.
பிஜேபி அல்லது அதிமுக விரும்புவது போன்று, திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பூசலும் இல்லை, இந்தியா கூட்டணி வலிமையுடன் உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளதாகவும் அவர் கூறினார். பிஜேபி ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து விட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார்.























