பீகாரில், 121 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 121 தொகுதிகளில் பல கட்சிகளை சேர்ந்த 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பீஹாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க எதிர்க்கட்சியான காங்., கூட்டணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, புது போட்டியாளராக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது.
இத் தேர்தலில், ஆளும் தே.ஜ., கூட்டணி முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பீஹாரின் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

























