திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் நாட்டில் நடக்கின்ற அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இப்போது ஒரு கும்பலின் தலைமையாக உள்ள அன்புமணியும் அவரது துணைவியார் செளமியா அன்புமணியும் ஒற்றுமையாக 46 ஆண்டுகள் தன்னுடன் வந்த சொந்தங்களை ஒன்று சேர்த்துள்ளதாகவும், தான் சில தவறுகளை அரசியலில் செய்துள்ளதாகவும், அதில் ஒன்று அன்புமணியை மத்திய சுகாதார துறை அமைச்சராகவும் பாமக தலைவர் பொறுப்பு கொடுத்தது என தெரிவித்தார்.
அமைதியாக பாமகவை நடத்தி கொண்டிருக்கிறபோது அதில் ஒரு பிளவு ஏற்பட்டிருப்பதாக மக்கள் அரசியல் கட்சியினர் பேசி கொண்டிருக்கின்றனர். அருவருக்க தகையில் அன்புமணியின் செயல்பாடு உள்ளதாகவும், அன்புமணியிடம் உள்ளவர்கள் அய்யா என்று அன்போடு அழைத்தவர்கள் சில பல காரணங்களுக்காக அன்புமணியிடம் சென்று சேர்ந்து கொண்டு என்னையும் கெளரவ தலைவர் ஜிகே மணியையும் சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர்.
ஐந்து பாமக சட்டமன்ற உறுப்பினர்களில் 2 பேர் தன்னுடன் இருக்கிறார்கள் மூன்று பேர் அன்புமணி பக்கம் சென்றுள்ளனர் அய்யா மாதிரி கட்சியை நடத்த முடியாது என்றும் பல பிரதமர்களை பார்த்துள்ளவர் என தெரிவிக்கின்றனர்.பல்வேறு போராட்டங்களை செய்துள்ளதாகவும் அதில் வன்முறை இருக்காது கத்தி இருக்காது மனம் புண்படாமல் பதில் கூறும் அளவில் அரசியலில் ஏற்படுத்தி வந்திருப்பதாகவும், தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலிருந்து 38 மாவட்டமாக உருவாக தான் காரணம் என தெரிவித்தார்.
அன்புமணியும் செளமியா அன்புமணியும் நான் வளர்த்த சிலபேரை அழைத்து பொறுப்புகளை வழங்கி உள்ளனர். 20 வருடங்களுக்கு மேலாக என்னிடம் இருந்தவருக்கு பழைய காரை கொடுத்து அழைத்துள்ளனர்.
புதிய பாணியை கடைபிடிக்கிறார்கள் சமூக வலைதளங்களில் தன்னை பற்றியும் தன்னுடன் இருக்கும் ஜிகே மணி பற்றி அவதூறாக பேசுவதாகவும், ஒரு கட்சியிலையே அடி தடி ஏற்படுத்துகின்றனர். நாகரீகமாக போராடுவது தான் வளர்ச்சி, மாலை போடுவது பட்டாசு வெடிக்க கூடாது பொன்னாடை போடுவது வேண்டாம் அதற்கு பதிலாக எலும்பிச்சை பழம், புத்தகம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும், அரசியல் பயிலரங்கம் அமைத்து நாகரீகமாக எப்படி செயல்படவேண்டும் கூறி வருகிறோம், அன்புமணி என்னை விட்டு பிரிந்து போய் ஒரு கும்பலை சேர்த்து கொண்டு கத்தி கபடா போன்று பயங்கரமாக செயல்படுவதை விட்டு திருந்த வேண்டும் என கூறினார்.
வன்முறை சம்பந்தமான பேச்சு பேசும் போது அந்த கும்பலில் இருப்பவர்கள் கத்தி எடுப்பதாகவும், சேலம் மாவட்டத்தில் துக்கம் விசாரிக்க சென்ற அருள் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு தப்பி பிழைத்துள்ளார். இதுவா descent and development politics என்றும் இதுவா நாட்டை வளப்படுத்தும் என அன்புமணியை விமர்சனம் செய்தார். பாமக கட்சியில் உள்ளவர்களையும் மற்ற கட்சியில் உள்ளவர்கள் தரக்குறைவான விமர்சனங்களை பதிவிடுவதை பார்க்க வேண்டாம் இதையெல்லாம் விட்டு விடவேண்டும் கட்சி நடத்த வேண்டும் என்றால் பத்து பேரை வைத்து கட்சி நடத்தி கொள்ளுங்கள் ஆனால் பாமக கட்சி பெயரையோ கொடியையோ எப்பொழுதும் அன்புமணி உபயோகப்படுத்த கூடாது.
தனி கட்சி வேண்டுமென்றால் ஆரம்பித்து கொள்ளுங்கள் 21 பேரை வைத்து கொண்டு கட்சியை அன்புமணி ஆரம்பித்து கொள்ளலாம் அதற்கு பெயர் வேண்டுமானாலும் தான் வைத்து தருவதாக தெரிவித்தார். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும் என அரசியல் கட்சி தலைவரக்ள் விரும்புகின்றனர். கலைஞர் கருணாநிதி அடிக்கடி சொல்லுவார் நாகரீகமான அரசியலை நடத்த வேண்டும் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என கூறுவார்.
பாமகவில் உள்ளவர்களுக்கு கூறுவது எந்த நிலையிலும் கத்தியை எடுக்க கூடாது. மோடி அடிக்கடி ஒன்னு சொல்லுவார் அந்த வகையில் அன்புமணிக்கு சொல்வது என்ன என்றால் புது கட்சியை ஆரம்பித்து கொள்ள வேண்டும் பாமக கட்சியின் பயனை அன்புமணி அனுபவதித்து விட்டார் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.
பாமகவில் உள்ளவர்கள் மீது எதாவது வன்முறை நடந்தால் அதற்கு அன்புமணியும் அவரது துணைவியார் செளமியா அன்புமணி தான் காரணம். டிசம்பர் 30 ஆம் தேதி ஆத்தூர் தலைவாசலில் பாமக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அந்த பொதுக்குழுவில் கூட்டணி குறித்து கருத்துகள் கேட்கப்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

























