கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ அலுவலர் பாரம்பரிய கட்டிடம் ஆனது ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அங்கு நடைபெற்ற பூமி பூஜையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கட்டிடத்தினை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மேயர் சுந்தரி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தமிழகத்தில் வேளாண் நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து தவெக தலைவர் விஜய் கருத்திற்கு பதிலளித்த அவர், ஆட்சி நிர்வாகம் என்பது சூட்டிங் கிடையாது, செட்டு போட்டு நாடகம் ஆடுவதற்கு எனவும், கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் திட்டமிட்டே 41 பேரை பலி கொடுத்தவர் விஜய் எனவும் கடுமையாக சாடினார். படத்தில் நூறு பேரை அடிக்கும் விஜய் கொரோனா காலத்தில் எங்கு போனார், மருத்துவர் எனக் கூறிக் கொள்ளும் அன்புமணி ராமதாஸ் எங்கு சென்றார் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
உரம் பதுக்கள் குறித்து பதிலளிக்கையில் குற்றம் நடைபெறும் இடங்களை சுட்டிக்காட்டுங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

























