சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டி நகரை சேர்ந்த மகேஸ்வரியை கொலை செய்த – சசிகுமார் அங்கிருந்து தப்பி வேலங்குடி அருகே உள்ள கண்மாயில் குளித்துவிட்டு, அருகே தோட்டத்தில் காய்ந்து கொண்டிருந்த துணியை மாற்றிக்கொண்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அங்கு மகேஸ்வரி இறந்தது குறித்து அவரது உறவினர்களிடம் சோகத்துடன் பேசியுள்ளார். இது சம்பந்தமாக விசாரிக்க தொடங்கிய காவல் துறையினர் மகேஸ்வரி கொலை வழக்கு சம்பந்தமாக நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. வீட்டிலிருந்து காரில் கிளம்பியதிலிருந்து சம்பவம் நடந்த இடம் வரை இருந்த 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். ‘அதேபோல் மகேஸ்வரியின் அலைபேசியில் இருந்த, 10க்கும் மேற்பட்ட, எண்களை தொடர்பு கொண்டு, அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து போலீசார் விசாரணை செய்தோம்.
அப்போது சசிகுமார் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. சமீபத்திய எண்களை தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை செய்தோம். அதில் சசிகுமார் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஆனாலும் இதனை உறுதி செய்ய அவரது வீட்டிற்கு சென்றோம். அவரது வீட்டிலிருந்த புறா கூண்டில் பாதி நகைகளை ஒளித்து வைத்திருந்தார். மீதி நகைகளை, தனியார் பைனான்ஸ் கடை ஒன்றில் அடகு வைத்திருந்தார். அடகு வைக்கப்பட்ட நகை தவிர மற்ற நகைகளை மீட்கப்பட்டுள்ளது.
சசிகுமார், தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி மகேஸ்வரி இடம் தந்துள்ளார். பலமுறை கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்டும் மகேஸ்வரி கொடுக்கவில்லை. சசிகுமாருக்கு நெருக்கடி அதிகமானதால் நகைக்காக கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
மகேஸ்வரி இடம் டிரைவராக சசிகுமார் அறிமுகமாகி தொடர்ந்து அவருக்கு டிரைவிங் பழகி தந்துள்ளார்.
மேலும் மகேஸ்வரியின் உறவினர்கள் சந்தேகப்படும் நபரை தான் முதலில், ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தினோம். அதைத் தொடர்ந்து சசிக்குமாரை பிடித்து விசாரித்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட கொலையாளியை 5 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம். என்று தெரிவித்தனர்.

























